கருணாநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுக் குழு கோரிக்கை
சென்னை:
இந்துக்களை இழிவுபடுத்திப் பேசி வரும் திமுக தலைவர் கருணாநிதி மீது மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்என அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக நடந்த அதிமுகவின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்மிகவும் ஹை-லைட்டானது திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக நிறைவேறிய தீர்மானம் தான். அதன் விவரம்:
மதசார்பின்மை என்றால் இந்துக்களை எதிர்ப்பது என்று பொருள் அல்ல. அதற்கு மாறாக அனைத்து மதங்களையும் மதத்தைச்சேர்ந்தவர்களையும் மதித்து நடப்பது தான் உண்மையான மதசார்பின்மையாகும். இதுவே கழகப் பொதுச் செயலாளர் அம்மாஅவர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் மதசார்பின்மையாகும்.
ஆனால், கருணாநிதியோ இந்துக்களைத் திட்டுவதும், இழிவுபடுத்துவதுமாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில்நடந்து வருகிறார்.
கும்குமம் இடுவது, தீ மிதிப்பது போன்ற பழக்கங்களை ஏளனம் செய்வதும், இந்து என்றால் திருடன் (இது ஆர்.எஸ்.எஸ்.வெளியிட்டுள்ள புத்தகத்தில் தான் கூறப்பட்டுள்ளது என்று கருணாநிதி பலமுறை விளக்கம் தந்துவிட்டார்) என்று சொல்வதும்,இந்து மதம் என்பது மதமே அல்ல என்றும் கூறுவதும் அவரது வாடிக்கை ஆகிவிட்டது. பிற மதங்களைச் சேர்ந்தவர்களைகுளிர்விக்கவே கருணாநிதி இப்படி பேசி வருகிார்.
இதனால் கருணாநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 159 (ஏ) பிரிவின் கீழ் மத்திய அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications