இலங்கை சிறைகளிலிருந்து 44 தமிழக மீனவர்கள் விடுதலை
யாழ்ப்பாணம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகக் கூறி அந்நாட்டுக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில தமிழ் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் அந்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டனர். மொத்தம் 62 மீனவர்கள் வரை கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைகளில் வாடி வந்த இம்மீனவர்களை மீட்பதற்காக இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள பருத்தித் துறை மற்றும் நீர்க்காவல் துறை நீதிமன்றங்களில் 62 மீனவர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 44 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை கடற்படைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீதமுள்ள 18 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications