"தமிழகத்தின் மோடி" ஜெயலலிதா: இளங்கோவன் வர்ணனை
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை "தமிழகத்தின் நரேந்திர மோடி" என்றே அழைக்கலாம் என மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,
பாண்டிச்சேரியில் ரொட்டி சாப்பிட்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பட்டினியால் வாடச் செய்து, எலிக்கறி சாப்பிட வைக்கும் அளவுக்கு அவர்களை மோசமான நிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாவுக்கு, பாண்டிச்சேரி சம்பவம் குறித்துக் குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது?
இந்துக்களைப் பற்றி பேசியதற்காக கருணாநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவை சுருக்கமாக "தமிழகத்தின் நரேந்திர மோடி" என்றே அழைக்கலாம். மோடி அங்கே இந்து மதத்தை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடினார். இவர் இங்கு அதைச் செய்து வருகிறார் என்றார் இளங்கோவன்.
-->
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications