"வேத ஆகம பள்ளிகள் மீது குண்டு வீசுவேன்": ராமதாசுக்கு கோர்ட் நோட்டீஸ்
மயிலாடுதுறை:
வேத ஆகம பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய வழக்கில் அவர் வரும் ஜனவரி 8ம் தேதி ஆஜராக வேண்டும் என்று மயிலாடுதுறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில், பிராமணர்களை மிகவும் இழிவாகப் பேசியதோடு, வேத ஆகம பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவோம் என்றும் மிரட்டல் தொணியில் பேசினார்.
இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் ராமதாஸ் மீது வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வராமல் இருந்த ராமதாஸுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
இதற்கிடையே ராமதாஸ் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவைப் பரிசீலித்த மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், போலீசார் பதிவு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், இவ்வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 8ம் தேதி ராமதாஸ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-->
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications