சென்னை பள்ளிகளில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள்: பீதியில் பெற்றோர்- கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:
சென்னையில் உள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி வரும் மிரட்டல்களைத்தொடர்ந்து மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. இதனால்பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டுபயத்துடன்தான் நாட்களை கழிக்கிறார்கள்.
இந்நிலையில் அசோக் நகரில் உள்ள ஒரு கார் மெக்கானிக் கடை முன்பு ஒரு கடிதம் போடப்பட்டிருந்தது. அந்தக்கடிதத்தில்,
சென்னையில் மனித வெடிகுண்டுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அசோக் நகர், தி. நகர், மேற்கு மாம்பலம்ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்கள் சென்று குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்.
வரும் ஜனவரி 5ம் தேதியிலிருந்து 12ம் தேதிக்குள் இந்தக் குண்டுகள் வெடிக்கும் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது உண்மையிலேயே மிரட்டல்கடிதம்தானா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் எச்சரிக்கை:
இந்நிலையில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டிருந்த 11 பயங்கரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
கொடுங்கையூரில் போலி தேயிலை விற்றது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்விஜயகுமார்.
-->


