முஸ்லீம் பாதுகாப்புப் படை தீவிரவாதிகள் மீது பொடா சட்டம் பாய்கிறது
சென்னை:
தமிழகத்தில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்தவும், முக்கிய தலைவர்களைக் கொல்லவும், மதக் கலவரத்தைத்தூண்டவும் திட்டமிட்டு போலீசாரிடம் சிக்கிய முஸ்லீம் பாதுகாப்புப் படை தீவிரவாதிகள் மீது பொடா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத் தகவலை சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி நாடு முழுவதும் தாக்குதல் நடத்த பல்வேறு தீவிரவாத அமைப்புகள்திட்டமிட்டிருந்தன. இதில் தமிழகத்தில் தாக்குதல் நடத்த முஸ்லீம் பாதுகாப்பப் படை என்ற புதிய அமைப்பேஉருவாக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணமும் வெடி மருந்துகளும் கூட வந்து சேர்ந்தன.பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலியின் மைத்துனர் தலைமையிலான படை இதற்காகதயாராகி வந்தது.
ஆனால், மத்திய உளவுப் பிரிவினருக்கு இது குறித்த ரகசிய தகவல்கள் கிடைக்கவே தமிழக போலீசாரைஉஷார்படுத்தினர். இதையடுத்து நடந்த ரெய்டுகள், சோதனைகளில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 6 பேர் தப்பிவிட்டனர். இவர்களைப் பிடிக்க பெங்களூர் உள்பட பல இடங்களில் தனிப் படைகள்தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.
முதலில் சென்னையில் பிடிபட்ட இருவர் தான் இந்த சதித்திட்டம் குறித்தும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும்தகவல்களைக் கக்கினர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு இமாம், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த அரபிக்கல்லூரியின் முதல்வர் உள்பட 11 பேர் சிக்கினர். இவர்கள் அனைவரும் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 11 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு யோசித்துவருகிறது.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் கூறுகையில், தப்பிவிட்ட தீவிரவாதிகளைப் பிடிக்க தனிப்படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. பிடிபட்டவர்கள் மீது பொடாவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமாஎன்று யோசித்து வருகிறோம்.
சமீபத்தில் சென்னையில் அசோக்நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்குவெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி தொலைபேசி மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன. மக்களிடையேபுரளியைக் கிளப்பி பீதி ஏற்படுத்த நினைக்கும் அந்தக் கும்பல்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இந்தச் செயலை அவர்கள் நிறுத்திவிடுவது நல்லது. எங்களிடம் பிடிபட்டால் அவர்கள் கதி அதோ கதி தான் என்றுஎச்சரித்துக் கொள்கிறேன்.
எதிர் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண உடைகளில்போலீசார் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கொடுங்கையூரில் பிராண்டட் நிறுவனங்களின் பெயரில் போலி தேயிலை தயாரித்தது தொடர்பாக இரண்டு பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போலி டீ தூள் கைப்பற்றப்பட்டுள்ளதுஎன்றார் விஜயகுமார்.
மீண்டும் மிரட்டல் கடிதம்:
இந்நிலையில் அசோக் நகரில் உள்ள ஒரு கார் மெக்கானிக் கடை முன்பு ஒரு கடிதம் போடப்பட்டிருந்தது. அந்தக்கடிதத்தில்,
சென்னையில் மனித வெடிகுண்டுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அசோக் நகர், தி. நகர், மேற்கு மாம்பலம்ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்கள் சென்று குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்.
வரும் ஜனவரி 5ம் தேதியிலிருந்து 12ம் தேதிக்குள் இந்தக் குண்டுகள் வெடிக்கும் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குப்போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications