நாளை ஜெ. குஜராத் பயணம்: மோடி பதவியேற்பில் பங்கேற்கிறார்
சென்னை:
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை முதல்வர் ஜெயலலிதா குஜராத் செல்கிறார்.
இன்று நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்றிரவு சசிகலாவுடன் ஜெயலலிதா டெல்லி சென்றார். இன்று இரவுஅவர் சென்னை திரும்புகிறார்.
பின்னர் நாளை காலை சிறப்பு விமானம் மூலம் ஜெயலலிதா அகமதாபாத் செல்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில்பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடியே மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
தான் முதல்வராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்களுக்கும், தேசியஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி முதல்வர்களுக்கும் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், தே.ஜ. கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பா.ஜ.கவை தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்திருக்கும் ஜெயலலிதாவுக்கும்நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று ஜெயலலிதா நாளை அகமதாபாத் செல்கிறார். வழக்கமாக குஜராத் தலைநகர் காந்திநகரில் தான்பதவியேற்பு விழாக்கள் நடக்கும். ஆனால், மோடியின் தொகுதியான மணிநகர் அமைந்துள்ள அகமதாபாத்தில் பதவியேற்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். ஆனால்,தே.ஜ.கூட்டணியில் இருந்தாலும் கூட பல மாநில முதல்வர்களும் முக்கிய கட்சித் தலைவர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால், ஜெயலலிதா இதில் கலந்து கொள்கிறார்.
குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது மோடியை நீக்கக் கோரி போர்க் கொடி தூக்கினார் ஆந்திர முதல்வரும் தே.ஜ.கூட்டணியின் முக்கிய தலைவருமான சந்திரபாபு நாயுடு. அப்போது மோடியை நீக்க வேண்டும் என ஜெயலலிதாவும் பேசினார்.
ஆனால், இப்போது மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.கவின் கொள்கைகளை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தி வரும்ஜெயலலிதா இந்த பதவியேற்பிலும் கலந்து கொள்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications