அருண் ஜெயின் விடுதலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் போலாரிஸ் ஊழியர்கள்
சென்னை:
போலாரிஸ் நிறுவனத் தலைவர் அருண் ஜெயின் இந்தோனேஷிய போலீஸாரால் விடுதலை செய்யப்பட்டதையடுத்து போலாரிஸ்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இருப்பினும் அருண் ஜெயின் விரைவாக இந்தியா திரும்பும் வகையில் அவரது பாஸ்போர்ட்டுகள் விரைவில் ஒப்படைக்கப்படவேண்டும் என்று அந் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான போலாரிஸ் நிறுவனத்தலைவர் அருண் ஜெயின், துணைத் தலைவர் ராஜீவ் அகர்வால் இருவரும் ஜகார்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் நேரடித் தலையீட்டின் பேரில் தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் தி.நகர், நாவலூர் ஆகிய இடங்களில் உள்ள போலாரிஸ் நிறுவன ஊழியர்கள், போலாரிஸ்நிறுவனத்துடன் விரைவில் இணையவுள்ள ஆர்.பி. டெக் நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது விடுதலை செய்து வெளியானதும் அலுவலகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அருண் ஜெயின் மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரின் குடும்பத்தினரை அலுவலகத்திலேயே பெரும்பாலான நேரம் தங்கவைத்து ஊழியர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த கைது விவகாரத்தால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று போலாரிஸ் நிறுவன துணத் தலைவர் ரகுராம்பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications