எச்சில் துப்பியதில் தகராறு: 2 வாலிபர்கள் குத்திக் கொலை
திண்டுக்கல்:
எச்சில் துப்பியது தொடர்பாக எழுந்த மோதலில் இரு வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இங்குள்ள ஏ.பி. நகர் காலனியைச் சேர்ந்தவர் அன்புராஜ்.
இவரது வீட்டின் வாசலில் ஞானராஜ் என்ற வாலிபர் எச்சிலைக் காரித் துப்பினார். இதனால் எரிச்சலடைந்த அன்புராஜ், ஏன் வீட்டுவாசலில் எச்சில் துப்பினாய் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஞானராஜின் தம்பி மனோகரன் தனது அண்ணனுக்கு ஆதரவாக மோதலில்இறங்கினார். இருவரும் சேர்ந்து அன்புராஜை அடிக்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து அண்டை வீட்டினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், திடீரென ஞானராஜூம் அவனது தம்பி மனோகரனும் தங்களிடம் இருந்த கத்திகளை உருவி அன்புராஜைக் குத்தினர்.இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அவர்களிடம் இருந்து அன்புராஜைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களையும் இந்த இரு சகோதரர்களும் சரமாறியாகக் கத்திகளால் குத்தினர்.
இதில் அன்புராஜ் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். சண்டையை விலக்கச் சென்ற ராஜேஷ் என்ற வாலிபருடம்கத்துக் குத்து விழுந்து இறந்தார். மேலும் 3 பேருக்கும் தொடை, நெஞ்சுப் பகுதிகளில் கத்திக் குத்துகள் விழுந்தன.
இதையடுத்து ஞானராஜும் அவனது தம்பி மனோகரனும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
காயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த வீட்டின் வாசலில் எச்சிலையும் துப்பிவிட்டு அதைத் தட்டிக் கேட்ட வீட்டின் உரிமையாளரையும் கொன்றுவிட்டு,சண்டையை விலக்கச் சென்றவரையும் கொன்றுவிட்டு ஓடியுள்ளனர் இந்த கேடுகெட்ட சகோதரர்கள்.
இவர்கள் ஏன் கத்திகளைத் தயாராகவே வைத்துக் கொண்டு திரிந்தனர் என்று தெரியவில்லை.
-->
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications