ரூ. 65 லட்சத்துடன் பிடிபட்ட 4 கேரள வாலிபர்கள்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான கொடுங்கையூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ரூ. 65 லட்சம்பணத்துடன் வந்த 3 கேரள வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவாலிபரும் பிடிபட்டார். அவர்கள் தீவிரவாதிகளா என்று விசாரணை நடந்து வருகிறது.
கொடுங்கையூர் போலீஸ் சோதனைச் சாவடியில் நள்ளிரவில் போலீஸார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரையும் நிறுத்தி டிக்கியில் சோதனை போட்டபோது, கத்தை, கத்தையாக பணம்இருந்தது.
இதையடுத்து பணத்தைக் கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த 3 பேரிடமும் விசாரித்தனர். அவர்கள்மலையாளம் கலந்த தமிழில் பேசினர். ஆனால், பணத்துக்கு அவர்களிடம் எந்தக் கணக்கும் இல்லை. அவர்கள்முன்னுக்கு பின் முரணாக தகவல்களைத் தந்தனர்.
அவர்களை போலீசார் விசாரிப்பதை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கவனித்துக் கொண்டிருந்தார்.அவரையும் போலீசார் பாய்ந்து பிடித்தனர்.
காரில் பணம் இருந்ததால் பாதுகாப்புக்காக பின்னாலேயே வந்ததாக அவர் தெரிவித்தார். தன்னுடைய பெயர்அஜீஸ் என்று கூறினார்.
பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாததாலும் அவர்களது நடவடிக்கைகளில் பெருத்த சந்தேகம் நிலவியதாலும்நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காரில் இருந்த பணம் யாருடையது, இதை எதற்காக கொண்டு சென்றனர் என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.சரியான தகவல்களைத் தராமல் இவர்கள் தண்ணி காட்டி வருகின்றனர்.
கேரளத்தில் இருந்து நகை வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
-->
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications