ஐயப்ப பக்தர்களிடம் மாமூல் வசூலிப்பதில் போலீஸ், வணிக வரித்துறையினர் போட்டாபோட்டி
திருநெல்வேலி:
தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக செக்போஸ்ட்டுகளில் ஐயப்ப பக்தர்களை ஏற்றி வரும்வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் மாமூல் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சபரிமலை சீசன் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து தமிழகம் தவிர தென் மாநிலங்கள் அனைத்தில்இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.
கார்கள், வேன்கள், பஸ்களில் வரும் பக்தர்களை நெல்லை மாவட்டத்தில் உள்ள புளியரை வணிக வரி சோதனைச்சாவடி அதிகாரிகளும் அருகே உள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடி அதிகாரிகளும் நிறுத்துகின்றனர்.
பின்னர் ஐயப்ப பக்தர்களிடம் தலையை சொறிந்து கொண்டு நின்று பணம் கேட்கின்றனர். தர மறுத்தால்வாகனங்களைச் செல்ல விடாமல் தடுக்கின்றனர்.
இது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் சம்பவம் தான் என்றாலும் இந்த ஆண்டு மாமூல் ரேட்டையும் இந்தபோலீஸ் மற்றும் வணிக வரி அதிகாரிகள் கும்பல் அதிகரித்துவிட்டது.
இதையடுத்து பல பக்தர்களும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வணிக வரி சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 4,000 பணம் இருந்தது. அருகில் உள்ளபோக்குவரத்து சோதனைச் சாவடியில் ரூ 9,000 பணம் இருந்தது.
இந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனால், இந்த லஞ்சக் கும்பலைச் சேர்ந்தஅதிகாரிகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications