உசிலம்பட்டி அருகே தம்பதியை வெட்டிக் கொன்று நகைகள் கொள்ளை
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த கணவன்-மனைவியை அரிவாளால் கொடூரமாகவெட்டிக் கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நல்லதாயம்பட்டி. இங்குள்ள ஒரு வீட்டிற்குள் நேற்றிரவு ஒருகொள்ளைக் கும்பல் புகுந்தது.
அந்த வீட்டிலிருந்தவர் அவர்களைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கொள்ளையர்கள்தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரைச் சராமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சாய்ந்த அவர் அந்த இடத்திலேயே பிணமானார். சத்தம் கேட்டு வந்தஅவருடைய மனைவியையும் கொள்ளையர்கள் வெட்டிக் கொன்றனர்.
பின்னர் அவர் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளையும் அவர்கள்அள்ளிக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவலறிந்து மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்களையும்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை-கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications