"நக்கீரன்" கோபால் தொடர்ந்த வழக்கு: தினகருக்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் குறித்து கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதிய புத்தகத்தில் தன்னைக் குறித்து அவதூறாகஎழுதியுள்ளதாக "நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக அடுத்தமாதம் 20ம் தேதி ஆஜராகுமாறு தினகருக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பின்போது ரூ.20 கோடி வரை கைமாறியதாகவும், அதில் "நக்கீரன்" கோபால் ரூ.1கோடி எடுத்துக் கொண்டதாகவும் தன் புத்தகத்தில் தினகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜ்குமாருடன் வீரப்பனிடம் மாட்டியிருந்த உதவி இயக்குநர் நாகப்பா தப்பி வரும்போது, வீரப்பனைக்கொல்ல முயன்றதாகவும், ஆனால் கோபால்தான் குறுக்கிட்டு அம்முயற்சியைத் தடுத்து விட்டதாகவும் தினகர்கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தினகர் இவ்வாறு கூறியுள்ளதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார் கோபால்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் 13வது மெட்ரோபாலிடன் நீதிபதி வெங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடவரதன், இவ்வழக்கில் தொடர்புடைய தினகர் உள்ளிட்ட மூன்று பேர் வரும்ஜனவரி 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+