வாஜ்பாய்க்கு வயது 79!
டெல்லி:
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று தன்னுடைய 79வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் வாஜ்பாய்க்குபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலைவாஜ்பாயின் வீட்டிற்குச் சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினர்.
தன் வீட்டுக்கு வந்த மக்களை அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார் வாஜ்பாய். தொடர்ந்து நான்கு மணிநேரத்திற்கு மக்கள் கூட்டம் அவருடைய வீட்டில் குவிந்தது.
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும்வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி கிராமப்புற குடிநீர்த் திட்டமான "ஸ்வஜல்தாரா"வைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய்.
வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி "போரும் அமைதியும்" என்ற தலைமையிலான சிறப்பு கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்தியா கேட்டில் நடைபெறும் இந்தக் கலைநிகழ்ச்சியைஷெகாவத், அத்வானி உள்ளிட்டவர்கள் பார்வையிடுகின்றனர்.
வாஜ்பாய் குறித்த புகைப்படக் கண்காட்சி ஒன்றும் நடைபெறவுள்ளது. மேலும் ரத்ததான முகாம் ஒன்றை பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.
-->
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications