நாமக்கல் அருகே அடுத்தடுத்து விபத்துக்கள்: 8 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் அருகே ஏற்பட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் பெங்களூரைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் ஒரு டாடா சுமோ காரும் எதிரே வந்தலாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. காரின் டயர் வெடித்ததால்தான் நிலை தடுமாறிய அதுலாரியுடன் மோதிக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவருமே பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் பெயர் விவரம்தெரியவில்லை.
இதற்கிடையே நாமக்கல்-திருச்சி சாலையில் மற்றொரு விபத்து ஏற்பட்டது. நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுவேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார் நிலை தடுமாறி மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கனகாம்பாள் (78) என்ற பெண்ணும், பிரசாத் (60) என்பவரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ரங்கநாத் (50) என்பவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
இவ்விபத்தில் உயிரிழந்த மூன்று பேரும் கூட பெங்களூரைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.கோவில்களில் சாமி கும்பிட்டு விட்டு திருச்சியிலிருந்து பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான்இவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications