புதிய கண்ணகி சிலை: ஜன. 12ல் கருணாநிதி திறந்து வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞர் அணி தலைமை அலுவலக வளாகத்தில் (அன்பகம்) புதியகண்ணகி சிலையை வரும் ஜனவரி 12ம் தேதி அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.

மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்றுதிமுக கோரி வருகிறது. இது தொடர்பாகப் பல போராட்டங்களையும் அது நடத்தியுள்ளது.

இந்நிலையில் "அன்பகம்" வளாகத்தில் புதிய கண்ணகி சிலை ஒன்று நிறுவப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.திமுகவின் சொந்தச் செலவில் இந்தச் சிலை வடிவமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் கருணாநிதி.

அதன்படி வரும் ஜனவரி 12ம் தேதி இந்தச் சிலை திறக்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அன்றுமாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைக்கிறார்.

முன்னதாக இந்த கண்ணகி சிலையை தேனாம்பேட்டை சந்திப்பில் வைக்க அனுமதி தருமாறு கடந்த செப்டம்பர்மாதம் திமுக சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அரசு அதற்கு அனுமதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அண்ணா சாலையைப் பார்க்கும் விதத்தில், அன்பகம் வளாகத்திலேயே கண்ணகி சிலையைஅமைக்க திமுக முடிவு செய்தது.

"ஒரிஜினல்" கண்ணகி சிலையை அன்றைய திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான அண்ணாத்துரைதிறந்து வைத்தார். புதிய கண்ணகி சிலையை இப்போதைய திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+