தானும் எரிந்து கணவரையும் எரித்த மனைவி
சென்னன:
குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் ஒருவர் தன் உடலில் கெரசின் ஊற்றி, தீக்குளித்து பரிதாபமாகஇறந்தார். அப்போது அவர் தன் கணவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டதால் அவரும் தீக்காயமடைந்து உயிருக்குப்போராடி வருகிறார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 2 மகன்கள்உள்ளனர்.
தச்சுத் தொழிலாளியான தனுஷ்கோடிக்கும், மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நிறைய சம்பாதித்துவரவில்லை என்று கூறி கணவருடன் சண்டை போடுவாராம் மாலதி.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த மாலதி தன் உடல் மீது கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனுஷ்கோடி, அவரைக் காப்பாற்ற முயன்றார்.
ஆனால் "நானே சாகும்போது நீ மட்டும் எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்?" என்று கூறிக் கொண்டேதனுஷ்கோடியைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார் மாலதி.
இதில் இருவரும் கருகினர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மகன்களுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.இதையடுத்து பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மாலதி பரிதாபமாக இறந்தார். தனுஷ்கோடி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.ஆகாஷ் என்ற மகனின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது அவர்கள் இருந்த குடிசையும் முழுவதும் எரிந்து சாம்பலானது. சம்பவம் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications