4ம் தேதி டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டம்: தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?
சென்னை:
வரும் ஜனவரி 4ம் தேதி டெல்லியில் காவிரிக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார். இதில்முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார்.
மேட்டூரில் நீர் மட்டம் வெகு வேகமாகக் குறைந்து விட்டதால் இன்று அணை மூடப்படுகிறது. இதனால் கர்நாடகத்திடம் இருந்துஉடனே நீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. மழை நின்றுவிட்டதால் சம்பா பயிர்களைக் காப்பாற்ற நீர்தேவைப்படுகிறது. ஆனால், கர்நாடகம் நீர் விட மறுத்து வருகிறது.
இப்போது மேட்டூர் அணையில் இருக்கும் நீர் சேலம் மாவட்ட குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய போதுமானதாகஉள்ளது. அணையில் உள்ளே இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தியும், மதா கோவிலும் வெளியே தெரியும் அளவுக்குஅணை வறண்டுவிட்டது.
இதனால் அணையை நேற்ற மூடிவிட உத்தரவிடப்பட்டது. ஆனால், விவசாயிகள் கோரிக்கை வைத்ததால் இன்றும் நீர்விடப்பட்டது. ஆனால், இன்று இரவோ அல்லது நாளையோ மேட்டூர் அணை மூடப்பட்டுவிடும்.
இதனால் உடனே காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா இரு கடிதங்கள் எழுதினார்.
இதைத் தொடர்ந்து வரும் 4 அல்லது 5ம் தேதி காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் எந்த நாளில்கூட்டம் நடத்தலாம் என்று முதல்வர்கள் தங்களது கருத்தை உடனே தெரிவிக்குமாறும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆந்திரம்தவிர்த்த தென் மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதுசசிகலாவுடன் ஹைதராபாத்தில் ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா இதற்காக 2ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு காவிரி ஆணையக் கூட்டத்துக்கு ஜெயலலலிதா செல்வார் எனமுதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications