ஜெ. பிறந்த நாள்: சம்பிரதாயத்துக்காக திறக்கப்பட்ட பொருட்காட்சி
சென்னை:
சென்னையில் ஒன்றுமே இல்லாத வெறும் பொருட்காட்சி ஒன்று நேற்று தொடங்கப்பட்டது. அங்கு போனால் வெற்றுகொட்டகைகளை மட்டும் காண முடியும்.
தமிழக அரசின சுற்றுலாத்துறை தான் இந்த ஒன்னுமில்லாத பொருட்காட்சியை திறந்துள்ளது. இனிமேல் தான் இந்தப்பொருள்காட்சியில் கடைகள், அரங்குகள் எல்லாம் அமைக்கப் போகிறார்கள்.
அப்புறம் ஏன் இதை நேற்றே திறந்தார்கள்?
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்றே (டிசம்பர் 27) இந்தப் பொருட்காட்சியைத் திறந்தே ஆக வேண்டும் என்று வந்தஅமைச்சரிடம் வந்த கட்டளை தான் காரணமாம்.
நாளை (29ம் தேதி) தான் இந்த பொருட்காட்சி தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் மெதுவாகத் தான் வேலைகள்நடந்து வந்தன. ஆனால், திடீரென அம்மாவின் பிறந்த நாள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நினைவுக்கு வந்துவிடஒன்னுமே இல்லாவிட்டாலும் பொருட்காட்சியைத் திறக்குமாறு உத்தரவு வந்தது.
உத்தரவை கீழ் நிலை அதிகாரிகள் புறக்கணிக்க முடியுமா?. அவர்களும் வெற்றுக் கொட்டகைகளைக் கொண்ட அந்தபிரம்மாண்டமான பொருட்காட்சியை நேற்று திறந்து வைத்துவிட்டார்கள்.
ரூ. 10 கட்டணம் செலுத்திவிட்டு உள்ளே வரும் பொது மக்கள், வெறும் கொட்டகைகளைப் பார்த்தால் என்ன செய்வார்கள் என்பதுஅதிகாரிளுக்கு நன்றாகவே தெரியும். இதனால் பொதுமக்களை 30ம் தேதி தான் அனுமதிக்கப் போகிறார்களாம்.
அப்புறம் ஏன் சார் நேத்தே திறந்தீங்க என்ற நம் கேள்விக்கு ஒரு அதிகாரி தந்த பதில், சம்பிரதாயத்துக்காக தான் சார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications