தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து
தஞ்சாவூர்:
காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரேசன்கடைகளுக்கு அரிசி வழங்க முடியாத அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
இதனால், காவிரி டெல்டாவில் உள்ள உணவுக் கழக குடோன்களில் எவ்வளவு அரிசி உள்ளது என்பது குறித்து இரு அமைச்சர்கள்நேரில் இன்று சோதனை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவால் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட்டதாலும், நல்ல மழை பெய்ததாலும் சம்பா பயிரைமகிழ்ச்சியுடன் பயிரிட்டனர் இந்த விவசாயிகள். இப்போது வளர்ந்து நிற்கும் இந்தப் பயிர்களைக் காப்பாற்ற உடனே தண்ணீர்தேவைப்படுகிறது.
ஆனால், மேட்டூர் வற்ற ஆரம்பித்துவிட்டதாலும் மழை போதிய அளவு பெய்யாததாலும் கர்நாடகம் மீண்டும் முரண்டுபிடிப்பதாலும் விவசாயிகள் மத்தியில் மிரட்சி ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, நாகப்பட்டிணம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒழுங்காக நீர் கிடைத்தால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 13 லட்சம்ஏக்கரில் இங்கு நெல் விளையும். இங்கு உற்பத்தியாகும் நெல் தான் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் வினியோகிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், இம்முறை உச்ச நீதிமன்றம் தலையிட்டு கர்நாடகத்தை தலையில் கொட்டி தமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செய்ய செப்டம்பர்6ம் தேதி ஆகிவிட்டது. இதனால், வழக்கமாக ஆகஸ்டில் தொடங்க வேண்டிய சம்பா நெல் பயிரிடும் பணி செப்டம்பருக்குத்தள்ளிப் போனது.
சம்பா பயிரிடப்பட்ட உடனே கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வருவது உடனே நின்றுவிட்டது. இதனால் மேட்டூரில் இருந்துதஞ்சைக்கு நீர் வருவதும் குறைக்கப்பட்டது. அப்படி இப்படி என மேட்டூர் அணையில் இருந்து அவ்வப்போது திறந்துவிடப்பட்டநீரை வைத்து இத்தனை நாட்களாக சமாளித்துவிட்டனர் விவசாயிகள்.
ஆனால், நீர் மட்டம் மளமளவென குறைந்துவிட்டதால் மேட்டூர் அணையையும் மூட வேண்டிய அளவுக்கு இப்போது நிலைமைமிக மோசம். இதனால் சம்பா நெல் தப்புமா அல்லது குறுவை நெல் மாதிரி காய்ந்து கருகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சம்பா நெல் ஒழுங்காக அறுவடை செய்யப்பட்டால் தான் தமிழகத்துக்கு 10 லட்சம் டன் நெல் கிடைக்கும். இது கருகினால் உணவுகுடோன்கள் காலியாகும். தமிழகத்தில் ரேசன் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
இது குறித்து அரசுக்கு அதிகாரிகள் எச்சரிக்கையை அனுப்பிவிட்டனர். இதையடுத்து இன்று உணவுத்துறை அமைச்சர் மோகன்மற்றும் வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அவசரமாக தஞ்சைக்கு செல்லுமாறுஉத்தரவிட்டார்.
தஞ்சைக்கு விரைந்து வந்த இரு அமைச்சர்களும் உணவுக் கழக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். உணவுநிலைமை குறித்து விவாதித்தனர். அப்போது காவிரி பாசனப் பகுதியில் உள்ள அனைத்து குடோன்களிலும் சேர்த்தே 50 ஆயிரம்டன்னுக்கும் குறைவாகவே அரிசி இருப்பதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோசல்ராமும் அதிகாரிகளும் அமைச்சர்களிடம்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதை வைத்துக் கொண்டு ரேசன் கடைகளுக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும் எத்தனை நாட்கள் அரிசி வழங்க முடியும் என்றுஆலோசிக்கப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications