உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போதைய நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வி.வி.எஸ். லக்ஷ்மண் உலகக்கோப்பைப் போட்டிக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.
அவருக்குப் பதிலாக தற்போது அணியில் இல்லாத தினேஷ் மோங்கியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்ஆடவுள்ளார்.
தற்போது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணியின் கேப்டன் கங்குலியுடனும், பயிற்சியாளர் ஜான்ரைட்டுடனும் "டெலி-கான்பரன்ஸ்" மூலம் பேசி முடிவெடுத்த பின்னர் 15 பேர் குழுவை இந்திய கிரிக்கெட் போர்டுஅறிவித்தது.
அணி விவரம்:
செளரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், தினேஷ் மோங்கியா, ஜவகல்ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர், யுவராஜ் சிங், ஆசிஸ் நேஹ்ரா, பார்த்திவ்பட்டேல், முகம்மது கைப், சஞ்சய் பங்கர்.
ஐ.சி.சி. தரும் சிக்கல்:
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் இந்த 15பேருமே உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியும் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டியின்போது தாங்கள் அறிவிக்கும் விளம்பரதாரர்களின் பெயர், லோகோ போன்றவற்றைமட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வற்புறுத்தியுள்ளது. அவற்றை மட்டுமேதங்களுடைய உடைகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தயார் செய்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் வீரர்கள்மட்டுமே உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியும் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட இந்திய அணி வீரர்கள் மறுத்து விட்டனர். அவர்களுக்கு இந்தியகிரிக்கெட் போர்டும், இந்திய விளையாட்டுத் துறையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 15 இந்திய வீரர்களின் பெயர்ப் பட்டியல் ஐ.சி.சிக்கு அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால் இவர்கள் அனைவருமே ஐ.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதால் இந்தப் பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. நிராகரித்து விடும் என்றே தெரிகிறது.
அவ்வாறு அந்தப் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டு விட்டால் வேறொரு அணியை இந்திய கிரிக்கெட் போர்டுஅறிவிக்க வேண்டும். அதிலும் நாளைக்குள்ளாகவே புதிய அணி அறிவிக்கப்பட வேண்டும்.
டால்மியா ராஜினாமா:
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்பந்த கமிட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் போர்டுதலைவரான ஜக்மோகன் டால்மியா இன்று ராஜினாமா செய்துவிட்டார்.
ஐ.சி.சியின் ஒப்பந்தம் இந்திய வீரர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அந்தக் கமிட்டியில் தான் தொடர்ந்துநீடிப்பது சரியல்ல என்பதால், ஒப்பந்தக் கமிட்டியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக டால்மியாநிருபர்களிடம் கூறினார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications