மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர படகு சவாரிக்கு ஏற்பாடு!
மதுரை:
மதுரை வண்டியூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் படகு சவாரி விடுவதற்குவசதியாக, நிரந்தரமாக தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மீனாட்சி அம்மன்கோவில் செயல் அதிகாரி பாஸ்கரன் தெரிவித்தார்.
வண்டியூர் தெப்பக்குளத்தில் நேற்று படகு சவாரி ஆரமபிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சேது. ராமச்சந்திரன்சவாரியைத் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பாஸ்கரன் பேசுகையில்,
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வண்டியூர் தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் படகு சவாரி விட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய தெப்பக் குளங்களில் ஒன்றாக் திகழும் வண்டியூர் தெப்பக்குளத்தில் 12 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க முடியும்.
மணலூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றிலிருந்து தண்ணீரை பம்ப் செய்து தெப்பக்குளத்திற்கு கொண்டு வரும்திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது.
அனுமதி கிடைத்தவுடன் அதற்கான மின்சாரச் செலவை கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். இதன் பிறகுதெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட முடியும்.
தெப்பக்குளத்தில் படகு சவாரி நிரந்தரமானவுடன் அதைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். வரும் ஜனவரி 19ம்தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது என்றார் பாஸ்கரன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications