கேரளாவில் மீண்டும் தமிழக அரசு பஸ் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

திருச்சூர் (கேரளா):

கேரளாவில் தமிழக அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ஒரு சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு பஸ் நிலையத்தில் மதுரைக்குப் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்ததமிழக அரசு பஸ்சை அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துக் கொளுத்தினர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்ட போதிலும் பஸ்சின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாயின. ஆனால்பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவும்இல்லை.

இந்நிலையில் சேலத்திலிருந்து கேரளாவில் உள்ள குருவாயூரை நோக்கி தமிழக அரசு பஸ் ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது.

இந்த பஸ் திருச்சூர் அருகே உள்ள கேரள அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போ அருகே சிறிது நேரம் ஓய்வுக்காகநிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர் அந்த பஸ் மீது சராமாரியாகக் கற்களை வீசி எறிந்தனர். இதில் பஸ்சின்ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

மேலும் பஸ்சைத் தீயிட்டுக் கொளுத்தவும் முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அங்கு வந்த டிப்போஊழியர்களும் மற்றவர்களும் அதைத் தடுத்து விட்டனர். இருந்தாலும் அடையாளம் தெரியாத அந்நபர்கள்இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை கேரளாவில் தமிழக அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள்குடியரசுக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதல்களைநடத்தியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பவானி ஆற்றில் கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கத்தொடங்கியிருப்பதைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடந்திப்பதால், இந்தக் கோணத்திலும் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+