டிராக்டர் கவிழ்ந்ததில் மண்ணில் புதைந்து 3 கூலித் தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
தருமபுரி அருகே மண் டிராக்டரில் மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த டிராக்டர் கவிழ்ந்ததில் 3கூலித் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே சனத்குமார் நதியில் ஐந்து கூலித் தொழிலாளர்கள் வண்டல் மண்அள்ளி டிராக்டரில் கொட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று டிராக்டர் அவர்கள் மீது கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் இருந்த மண் முழுவதும் கொட்டிஅவர்களை முழுவதுமாக மூடிவிட்டது.
இதில் முனுசாமி (40), குட்டன் (40) மற்றும் வீரகாரன் (40) ஆகிய மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறி அந்தஇடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேசன் மற்றும் செல்வராஜ் ஆகிய மற்ற இரண்டு தொழிலாளர்களும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications