ஒரு மாடல் கலெக்டர்
சேலம்:
நெசவாளர்களின் துயர்களைத் துடைக்கும் நோக்கில் சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6,000அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி, அவற்றை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்வதை அரசு நிறுத்தி விட்டதால்ஆயிரக்கணக்கான ஏழை நெசவாளர்கள் வேலையின்றி பட்டினியால் வாடத் தொடங்கினர்.
இவர்களுக்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. ஆனால் அதிலும்அரசியல் புகுந்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
இதையடுத்து நெசவாளர்களின் துயர்களைத் துடைப்பதற்காக அவர்கள் நெய்த துணிகளைக் கொள்முதல் செய்துஅவற்றை மலிவு விலையில் விற்க தமிழக அரசு முடிவு செய்தது.
ரேஷன் கடைகள் மூலமாகவும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாகவும் கைத்தறி ஆடைகள் மலிவு விலையில்விற்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், மாணவியரும்கைத்தறி வேஷ்டிகளையும், சேலைகளையும் வாங்கினர்.
அவற்றை அணிந்து கொண்டே கல்லூரிக்கு வந்தும் ஆச்சரியப்படுத்தினர்.
இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டரும், அம்மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 6,000 அரசு ஊழியர்களும்மலிவு விலை கைத்தறி ஆடைகளை சமீபத்தில் வாங்கினர்.
வாங்கிய ஆடைகளை நேற்று அவர்கள் அலுவலகத்திற்கு வந்தபோதும் அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பாக நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் தன் மனைவியுடன்கலந்து கொண்டார். இருவரும் கைத்தறி ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி வேட்டி சட்டையில்ராதாகிருஷ்ணனும், கைத்தறி சேலையில் அவரது மனைவியும் வந்து அசத்தினர்.
பின்னர் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவது தொடர்பாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
-->


Click it and Unblock the Notifications
