டான்சி நிலத்தை திருப்பிக் கொடுத்தார் ஜெயலலிதா
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா சர்ச்சைக்குரிய டான்சி நிலத்தை தமிழக அரசிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார்.
நேற்று சென்னையில் உள்ள சார்-பதிவாளர் (சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்தில் இந்த நிலத்தை ஜெயலலிதா தரப்பில்இருந்து அரசிடம் திருப்பித் தரப்பட்டது.
ஜெயலலிதாவும் அவருடைய தோழியான சசிகலாவும் தங்களுக்குச் சொந்தமான "ஜெயா பப்ளிகேஷன்ஸ்" மற்றும்"சசி என்டர்பிரைசஸ்" ஆகிய நிறுவனங்களின் பெயரில் கடந்த 1992ம் ஆண்டு அடிமாட்டு விலைக்கு இந்த நிலத்தைசுருட்டினர். டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.1.68 கோடிமட்டுமே கொடுத்து சுட்டனர்.
அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் இதை அதிகாரிகள் எதிர்க்கவில்லை. ஆனால், திமுக இதைஎதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மேலும் திமுக ஆட்சி காலத்திலும் இது தொடர்பாக தனி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைவிசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
இந்தத் தண்டனை காரணமாகத்தான் கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலில்ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போயிற்று.
ஆனாலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்ஜெயலலிதா. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம்விடுதலை செய்தது.
நீதிபதி தினகர் அளித்த இந்தத் தீர்ப்பையடுத்து ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும்தமிழக முதல்வரானார் ஜெயலலிதா.
இதற்கிடையே டான்சி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதியும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும்இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் இறுதியிலேயேமுடிவடைந்து விட்ட நிலையில் தீர்ப்பு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே டான்சி நிலத்தை திருப்பி அரசிடமே ஒப்படைக்கப் போவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் உச்சநீதிமன்றத்திலேயே அறிவித்தனர்.
டான்சி நிலத்தைத் திருப்பி ஒப்படைப்பதன் மூலம் வழக்கிலிருந்து எளிதாகத் தப்பித்துக் கொள்ளலாம்என்பதாலேயே ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். ஆனால் டான்சி நிலம் சென்னையில் உள்ள சிறு வழக்குகள்பிரிவு நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து டான்சி நிலத்தை ரிலீஸ் செய்யுமாறும், இந்த நிலத்தை அரசிடமே திருப்பித் தந்து விடுவதாகவும்சசிகலா சார்பில் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் டான்சி நிலத்தை அந்த நீதிமன்றம் ரிலீஸ் செய்தது. இதைத் தொடர்ந்துமீண்டும் தங்கள் வசம் வந்த டான்சி நிலத்தை நேற்று முறைப்படி ஜெயலலிதாவும் சசிகலாவும் அரசிடமே திருப்பிஒப்படைத்தனர்.
சென்னையில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
டான்சி நிலத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்காதுஎன்று ஜெயலலிதா நம்பிக் கொண்டிருக்கிறார்.
தவறை ஒப்புக் கொண்டுவிட்டார் ஜெ:
நிலத்தை மீண்டும் அரசிடம் திருப்பித் தந்ததன் மூலம் தான் செய்தது தவறு என்பதை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டுவிட்டார். இதனால் அவர் செய்த தவறுக்குதண்டனை தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications