சுடுகாட்டு கூரை ஊழல்: முன்னாள் மதுரை கலெக்டர் மீதான சி.பி.ஐ. விசாரணை ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மயானங்களுக்கு மேல் கூரை அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாகஅப்போதைய மதுரை கலெக்டர் பி.ஆர். சம்பத் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த முந்தைய திமுக அரசு அனுமதிஅளித்தது. ஆனால் அந்த அனுமதியை தற்போதைய அதிமுக அரசு ரத்து செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது சேலத்தில் சில பகுதிகளில் மயானங்களுக்கு மேல் கூரை அமைக்கும்பணிக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுத்து வந்த திமுகஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டது.

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம்சி.பி.ஐ. விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கலெக்டராக இருந்த சம்பத் மீதும் புகார் கூறப்பட்டதால்அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த திமுக அரசு அனுமதி அளித்தது.

ஆனால் தற்போது அந்த அனுமதியை அதிமுக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் பிறப்பித்துள்ளார்.

சம்பத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் சட்டப்பூர்வமாகப் பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகவும் லட்சுமி பிரானேஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+