For Daily Alerts
Just In
சாத்தான்குளம் இடைத் தேர்தல்: காங். தலைவர்கள் ஆலோசனை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடிவிவாதித்தது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை தொடங்கியது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்,செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சாத்தான்குளம் இடைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தேர்தலில் யாருடன் கூட்டணிவைப்பது, வேட்பாளர் தேர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
அதிமுக அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைநடத்தப்பட்டது.
-->


