தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரிப்பு: இளங்கோவன் புகார்
சென்னை:
தீவிரவாதம் என்ற நச்சுக்கொடி தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இதை ஒழிக்க காங்கிரஸ் கட்சிகடுமையாக போராடும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தீவிரவாதம் தமிழகத்தில் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நச்சுக்கொடியின் வளர்ச்சியைத் தடுக்கஆட்சியாளர்கள் முயற்சி எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதம் அதிகரித்து விட்டது. பள்ளிகள், கோவில்களில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தலாம் என்று ஆட்சி நடத்துபவர்களே கதை கட்டி விடுவதாக எனக்குத் தகவல்கள் வந்துள்ளன.
இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை அதிகரித்து, அதில் குளிர்காய நினைக்கிறது அதிமுக அரசு.
தீவிரவாதத்தை, அது எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒழிப்பதே காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.
ஊழல் வழக்கில் சிக்கிய பல அதிகாரிகள் இந்த ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களாகநியமிக்கப்படுகிறார்கள்.
லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வழித் தடங்களை நஷ்டத்தில் இயங்குவதாகப் பொய்க் கணக்கு எழுதும்படி அந்தஅதிகாரிகள் வற்புறுத்தப்படுகிறார்கள். இவை எல்லாம் மக்கள் மன்றத்தில் விரைவில் வெளிவரும் என்றார்இளங்கோவன்.
-->


