திருவண்ணாமலை கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பாலநாகதேவிக்கு இதுதொடர்பாக ஒரு மிரட்டல்கடிதம் வந்தது.
அதில், கோவிலின் முக்கியக் கோபுரங்களான ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம்மற்றும் பே கோபுரம் ஆகியவை 5 நாட்களில் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்த அந்தக் கடிதம் ஆங்கிலத்தில்எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவிலின் ராஜகோபுர நுழைவாயில் தவிர பிற நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலைச்சுற்றியும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே நுழையஅனுமதிக்கப்படுகிறார்கள். புத்தாண்டையொட்டி நேற்று கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட தீவிரமாகப்பரிசோதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கடிதம் அனுப்பியவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களைத் தேடிவருகின்றனர்.
-->


