36 தமிழக மீனவர்கள் பத்திரமாக ஒப்படைப்பு
ராமேஸ்வரம்:
இலங்கை மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்ட 36 தமிழக மீனவர்களும் இன்று பத்திரமாக தமிழகஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
டிசம்பர் 28ம் தேதி 36 மீனவர்கள், 9 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது,இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் கிளிநொச்சி நகர பிரதநிதியான ராஜநாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர் உடனே கொழும்பில்உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தந்தார்.
அவர்களை மீட்க தமிழக அரசும், இந்திய கடற்படையும் துரித நடவடிக்கைகளை எடுத்தன.
இதையடுத்து 36 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கைஒத்துக் கொண்டது.
இன்று அதிகாலை சர்வதேச கடல் எல்லையில் இந்த மீனவர்களை தமிழக அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள்ஒப்படைத்தனர்.
இவர்களை மீட்டு வருவதற்காக ராமேஸ்வரம் காவல் நிலை. இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் அதிகாரிகள்,படகுகளுடன் சர்வதேச கடல் எல்லைக்குச் சென்றனர்.
மீட்கப்பட்ட இவர்களைப் பத்திரமாக அவர்களது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தபோது அவர்களைக்கட்டிப் பிடித்து குடும்பத்தினர் உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்றனர். இவர்களை மீட்க உதவிய அதிகாரிகளுக்குமீனவர்களின் குடும்பங்கள் நன்றி தெரிவித்துக் கொண்டன.
-->


