For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான்குளம் இடைத் தேர்தல்: அதிமுகவை எதிர்த்து ஒன்று சேரும் எதிர்க் கட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாத்தான்குளம் இடைத் தேர்தலை வைத்து எதிர்க் கட்சிகள் ஒரே அணியில் திரண்டு வருகின்றன. அங்கு காங்கிரஸ்வேட்பாளரைப் போட்டியிட வைத்து அவருக்கு திமுக தலைமையிலான அனைத்து எதிர்க் கட்சிகளும் கூட்டாகஆதரவு தரலாம் என்று தெரிகிறது.

அதிமுகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்ற கோஷத்தை பாட்டாளி மக்கள்கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எழுப்ப ஆரம்பித்துவிட்டன.

சாத்தான்குளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. மணி நாடார் மறைவையடுத்து அங்குஇடைத் தேர்தல் நடக்க உள்ளது. பிப்ரவரியில் இத் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது.

இந்தத் தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு எதிராக புதிய கூட்டணி உருவாகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் கீழ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுதமிழக அரசியல் சூழ்நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சாத்தான்குளத்தில் அதிமுகவை எதிர்த்து திமுக போட்டியிட வேண்டும் என்றும், திமுகவுக்கு மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், திமுகவோ வேறு யோசனையில் உள்ளது. சாத்தான்குளம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.மறைந்ததால் அங்கு காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. இப்போது பா.ஜ.கவோடு உரசலில் உள்ள திமுக இந்தத்தேர்தல் மூலம் காங்கிரசுடன் நெருங்கலாம் என்று தெரிகிறது. இதனால், காங்கிரஸ் வேட்பாளரை திமுகஆதரிக்கலாம் கூறப்படுகிறது.

இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

மக்கள் விரோத அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சாத்தான்குளத்தில் தனித்தனியாகபோட்டியிடுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாங்கள் அங்கு போட்டியிடவில்லை. ஆனால் அங்கு திமுகபோட்டியிட்டு அதற்கு பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்தால், நாங்களும் ஆதரவு தெரிவிப்போம்.

எனவே அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும்.

அதிமுகவுடன் எங்களுக்கு ரகசிய உறவோ உடன்பாடோ இல்லை. இனிமேல் எந்தக் காலத்திலும் எந்தக்காரணத்திற்காகவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்றார் ராமதாஸ்.

ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை திமுக ஆதரித்தால் அவரை பா.ம.கவும் ஆதரிக்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இதற்கிடையே, இந்த இடைத் தேர்தலில் அதிமுகவைத் தோற்கடிப்பதே அனைத்துக் கட்சிகளின் ஒரேகுறிக்கோளாக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

கோயம்புத்தூரில் அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரான நல்லக்கண்ணு நிருபர்களிடம் பேசுகையில்,

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று நாங்கள் ஏற்கனவேகூறியுள்ளோம். ஆனாலும் வரும் 8ம் தேதி சாத்தான்குளத்தில் நடக்கும் எங்கள் கட்சிக் கூட்டத்தின் போதுதான்இறுதி முடிவு எடுக்கப்படும்.

பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில் நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மத்தியில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள எந்தக் கட்சியையும் நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. கட்டாயமதமாற்றத் தடைச் சட்டத்தை திமுக எதிர்க்கும் போதிலும் அதை ஆதரிக்கும் பா.ஜ.கவுடன் மத்தியில் உள்ளகூட்டணி அரசில் அக்கட்சி தொடர்வது நல்லதல்ல.

இந்துத்துவா குறித்து பா.ஜ.கவுக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி கருத்துக்கள் வெளியிட்டு வருவதுபாராட்டுக்குரியதுதான். அதுபோல பா.ம.க., மதிமுக போன்ற கட்சிகளும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். தேசிய ஜனநாயக் கூட்டணியை விட்டே அவை வெளியே வர வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத அதிமுகவைத்தோற்கடிப்பதே எங்கள் கட்சியின் முக்கியக் குறிக்கோளாக இருக்கும். அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்துபோய் விடக் கூடாது என்பதும் முக்கியம். அவ்வாறு பிரிந்தால் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என்றார் நல்லகண்ணு.

கிட்டத்தட்ட இதே நிலையைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எடுக்கும்.

காங்கிரஸ் தீவிர ஆலோசனை:

இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ஜ.க. தவிர்த்து பிற எதிர்க் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும்வேலையில் காங்கிரசும் இறங்கிவிட்டது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது குறித்து கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணனும், செயல் தலைவர்இளங்கோவனும் சேர்ந்து முடிவு செய்யலாம் காங்கிரஸ் தலைமை அதிகாரம் அளித்துவிட்டது.

சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. தங்களது வேட்பாளரை ஆதரிக்குமாறுகம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏற்கனவே அது கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஆதரவையும் தமிழக காங்கிரஸ் கோரவுள்ளது.

ஆனால், ராமதாஸ் யோசனையின் அடிப்படையில் திமுக சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரைஆதரிக்க இளங்கோவனின் ஆதரவாளர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால், இதை காங்கிரஸ் கட்சியின் பிறதலைவர்கள் ஏற்பது சந்தேகமே.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X