கடலில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு
சென்னை:
புத்தாண்டு தினத்தன்று கடலில் குளிக்கச் சென்ற 3 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கடலில் மூழ்கி பலியாகிஉள்ளனர்.
2003ம் ஆண்டு பிறந்ததையொட்டி சென் ன நகரில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேஷ், ராஜாக்கிளி, ராஜி என்ற ராஜேந்திரன் ஆகிய மூன்று பள்ளிமாணவர்களும் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் வந்தனர்.
அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை வந்து அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதில் மூன்று பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
ராஜேஷின் உடல் இன்று காலை நீலாங்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. துறைமுகம் பகுதியில் மற்றொருமாணவனின் உடல் ஒதுங்கியது. மூன்றாவது மாணவனின் உடலைக் காணவில்லை.
அதேபோல கோவளம் பகுதியில் கடலில் குளித்த ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும்ஜெயக்குமார் ஆகிய இரு இளைஞர்களும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இருவரது உடல்களும் கரைஒதுங்கின.
-->


