விவசாயி தற்கொலைக்கு ஜெயலலிதா தான் காரணம்: இளங்கோவன்
சென்னை:
தஞ்சாவூரில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியில் நீர் இல்லை, கர்நாடகத்திடம் பேசி நீரைப் பெறுங்கள் என்று பல அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் இந்தஅராஜக அரசிடம் மன்றாடின. ஆனால், தனது அக்கறையில்லாத போக்கினால் கர்நாடகத்திடம் நீரைக் கேட்டு பேச்சு நடத்தவேஇல்லை முதல்வர் ஜெயலலிதா.
இதனால் எலிக்கறி தின்று வாழும் அவல நிலைக்கு மீண்டும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக ஒரு விவசாயி பூச்சிமருந்தைக் குடித்து உயிரைத் துறந்துள்ளார். 3 நாட்களாக பட்டினி கிடந்து மனம் வெறுத்துப் போய் வீரையன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு அதிமுக அரசு தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் அலட்சியப் போக்கே விவசாயி வீரையனின் உயிரைக் குடித்துள்ளது. வீரையன்மட்டுமல்லாது, எத்தனையோ, விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டும், நண்டு சாப்பிட்டும் உயிரைப் பிடித்துக் கொண்டுள்ளனர்.காவிரி நீரைக் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு எப்படியாவது, தீர்வு காணும் என்று எதிர்பார்த்து, ஏமாந்து அதுநடக்காததால், ஆடு, மாடுகளை விற்று அண்டை மாநிலங்களுக்கு குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து போய் பிழைப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
உயிரிழந்த விவசாயியின் குடும்பம் இன்று நாதியின்றி நடுத் தெருவில் நிற்கிறது. அந்தக் குடும்பத்துக்கு உடனே அரசு உதவவேண்டும்.
வீரையன் போன்ற விவசாயிகளின் உயிரிழப்புக்குப் பிறகாவது இந்த அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட்டு விட்டு காவிரிநீரைப் பெற முயற்சிக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications