ஜாதிப் பாகுபாடு காட்டவில்லை: காஞ்சி மடம் மறுப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் ஜாதிப் பாகுபாடு ஏதும்காட்டப்படவில்லை என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மறுத்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் வகுப்புகளிலும் விடுதிகளிலும் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையேஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், விடுதி அறைகள் கூட தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு ஜாதி அடிப்படையில் தனியாக சாப்பாடு பரிமாறப்படுவதாகவும், தலித் மாணவர்கள் மற்றவர்களுடன்கலக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படுவதாகவும் செய்திகள் கிளம்பின.
புதிய தமிழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சங்கர மடத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதைக்கண்டித்து காஞ்சி மடத்தின் அருகிலேயே போராட்டம் நடத்தப் போவதாக கம்யூனிஸ்ட்கள் அறிவித்தன. அதே போல காங்கிரஸ்கட்சியும் இதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. உடனடியாக இந்த பாரபட்ச போக்கைக் கைவிடக் கோரிபல்கலைக்கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் குழுவினரே நேரில் வந்து பல்கலைக்கழகத்தையும் விடுதிகளையும் பார்வையிட வரலாம் என்றும்,ஜாதிப் பாகுபாடு ஏதும் நடக்கவில்லை என்றும் காஞ்சி மடம் அழைப்பு விடுத்தது.
இந் நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கு காஞ்சி மட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கிருஷ்ணமூர்த்திஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பல்கலைக்கழகத்தின் கல்வி அறைகளிலோ, அல்லது விடுதிகளிலோ எந்தவிதமான ஜாதி, மதப் பாகுபாடும்காட்டப்படவில்லை. இது தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications