மும்பை தீவிரவாதிகளுக்கு நாகர்கோவிலில் இருந்து சென்ற ரூ. 2 கோடி!
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கியிலிருந்து மும்பை தீவிரவாதிகளுக்கு ரூ. 2 கோடி வரை பணப்பட்டுவாடாசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வங்கியில் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. தீவிரசோதனையில் ஈடுபட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் வடிவேஸ்வரம் பகுதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து இந்தப் பணம் மொத்தமாகஎடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் உள்ள நாசர் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 2 கோடிபணம் மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக நாசர் என்பவரின் இந்தக் கணக்குக்கு வெளிநாடுகளில் இப் பணம் அனுப்பப்பட்டது. ஹவாலாமுறையில் இந்தப் பணம் இவரது கணக்குக்கு வந்து பின்னர் தீவிரவாத கும்பலுக்குச் சென்றிருக்கலாம் என்றுசந்தேக்கிக்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதிகள் பட்டியலிலும் இந்த நாசரின் பெயர் உள்ளது. இன்னும் இவர் சி.பி.ஐயிடம் சிக்காமல்உள்ளார். இவரை போலீசாரும் உளவுப் படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
நாசர் கணக்கில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்ட உடனேயே ஸ்டேட் பேங்க் உயர் அதிகாரிகள் வழக்கமானவிசாரணை நடத்தினர். அப்போது நாசர் கொடுத்திருந்த திருநெல்வேலியை முகவரியும் நாகர்கோவில் முகவரியும்பொய்யானவை என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரிடம் அதிகாரிகள் தகவல் தந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் தான்அந்தப் பணம் மும்பை போய்ச் சேர்ந்தது தெரிய வந்தது.
இதனால் கடந்த இரு தினங்களாக ஐ.பி. அதிகாரிகள் இந்த வங்கியில் முற்றுகையிட்டுள்ளனர். அனைத்துசந்தேகமான கணக்குகளையும் ஆராய ஆரம்பித்துள்ளனர். நாசருக்கு பணம் எந்த நாட்டில், எந்த வங்கியில்இருந்தது என்பதை அறியும் முயற்சியில் ஐ.பி. ஈடுபட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications