ரகசிய போலீஸ் கண்காணிப்பில் நக்கீரன் நிருபர்கள்

Subscribe to Oneindia Tamil

நக்கீரன் பத்திரிக்கை நிருபர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் எங்குசென்றாலும் ரகசிய போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே நக்கீரன் அலுவலகத்துக்கும், அதன் ஆசிரியர் கோபால் வீட்டுக்கும் போலீஸ் கண்காணிப்புபோடப்பட்டுள்ளது. அதே போல நக்கீரன் போன்களை ஒட்டு கேட்பது உள்பட அந்தப் பத்திரிக்கை முழுக்கமுழுக்க போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நக்கீரன் நிருபர்கள் பின்னாலும் போலீஸ் அலைய ஆரம்பித்துள்ளது. அவர்கள் வீட்டுக்குப்போனாலும், ரோட்டுக்குப் போனாலும் நிழல் மாதிரி ரகசிய போலீசார் தொடர்கின்றனர்.

இதற்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நிருபர்களின் பணியில் தலையிடும் போலீசாரை தடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சங்கங்கள் கடிதம்எழுதியுள்ளன.

சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், சென்னை பிரஸ் கிளப், பத்திரிக்கையாளர்கள் நடவடிக்கைக் குழு ஆகிய3 அமைப்புகளின் சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,

நக்கீரன் பத்திரிக்கை அலுவலகம், நிருபர்களின் வீடுகளுக்கு போடப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பை உடனேவிலக்கிக் கொள்ள வேண்டும். இது பத்திரிக்கை தர்மத்தை சீர்குலைப்பதாக உள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தில்போலீஸ் தலையிட எந்த உரிமையும் இல்லை.

இது போன்ற செயல்கள் ஜனநாயகத்திற்கே ஊறு விளைவித்துவிடும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக நக்கீரன் அலுவலகத்தையே அதிமுகவினரும்ரெளடிகளும் சூறையாடியது நினைவுகூறத்தக்கது. அந்த பத்திரிக்கையின் பிரஸ்சில் பணியில் இருந்த முதிய ஊழியரை மாடியில்இருந்து தூக்கி கீழே வீசிக் கொன்றது அக் கும்பல்.

பின்னர் வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் மீது தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். கோபாலையும் கைது செய்ய தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+