சம்பா பயிர் கருகியதால் தஞ்சாவூரில் விவசாயி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

காவிரியில் நீர் வராததால் கடன் வாங்கிப் பயிரிட்ட சம்பா பயிரும் கருகியதால் வாழ்க்கையே வெறுத்துப் போன வீரைய்யன்என்ற விவசாயி ஒருவர் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் தஞ்சாவூர் அருகே உள்ள சாலியமங்கலத்தை அடுத்துள்ள திருபுவனம் என்ற கிராமத்தில் மேலத்தெருவில்நடந்தது.

கடந்த ஆண்டு தமிழகத்தின் குறுவை நெல் சாகுபடியை கர்நாடகம் கெடுத்தது. நீரைத் தராமல் அரசியல் செய்ததால் ஒரு போகநெல் விளைச்சலையே இழந்தனர் விவசாயிகள். இதனால் சோற்றுக்கு வழி இல்லாமல் எலிக் கறித் திண்ணும் கேவலமானநிலைமை தமிழகத்தில் உருவானது.

இந் நிலையில் இரு மாதங்களுக்கு முன் நல்ல மழை பெய்ததால் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டவிவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்பா நெல்லை பயிரிட்டனர். பயிரிடுவதற்குத் தேவையான நெல்மணியைக் கூட கூட்டுறவுவிவசாய வங்கிகளிலும் தனியாரிடமும் கடன் வாங்கித் தான் நட்டனர்.

இந்த நெல்லைக் காப்பாற்ற பூச்சி மருந்து, உரம் வாங்கவும் தங்கள் சக்தியை மீறி மீண்டும் இவர்கள் கடன் வாங்கினர்.

நெல் விளைந்தால் கடனைத் திருப்பித் தந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளின் வாழ்க்கையில் கர்நாடகம்மீண்டும் விளையாடி வருகிறது. நீரைத் தர கர்நாடகம் மறுத்துவிட்டதால் உயிரைக் கொடுத்த விவசாயிகள் காப்பாற்றி வந்த இந்தசம்பா பயிர் கருக ஆரம்பித்துவிட்டது.

விளைந்து நிற்கும் இந்தப் பயிர்களைக் காப்பாற்ற மேலும் ஒரு மாதத்துக்கு நீர் தேவை. ஆனால் கர்நாடகத்தில் இருந்து நீர்வராததால் மேட்டூர் அணை வற்றி விட்டது. இதனால் மேட்டூர் அணையை மூடிவிட்ட தமிழக அரசு நீரை விடுவதையும்நிறுத்திவிட்டது.

இதனால் பல பகுதிகளிலும் இந்தப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகள் இழந்து விட்டனர். சம்பாநெல் விளைச்சல் நடக்கப் போவதில்லை என்ற அவநம்பிக்கைக்கு வந்துவிட்ட விவசாயிகள் காயும் பயிரை ஆடு, மாடுகளாவதுஉண்ணட்டும் என கால்நடைகளை வயல்களில் திறந்துவிட்டுள்ளனர்.

குறுவை நெல் இல்லாமல் போனதால் அரைப் பட்டினியில் கிடக்கும் விவசாயிகள் தங்களது ஆடு மாடுகளை குறைந்த விலைக்குவிற்றுச் சாப்பிடும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் பல விவசாயக் குடும்பங்கள் கூலி வேலை தேடி ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களை நோக்கி நகரஆரம்பித்துவிட்டன.

இந் நிலையில் ஏற்கனவே கடன் சுமையில் உள்ள தனக்கு குறுவை சாகுபடியும் இல்லாமல் போனதால் மனம் நொந்த வீரைய்யன்என்ற விவசாயி வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 55.

அவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த பல நாட்களாகவே வீட்டில் யாரும் முழு வயிறு சாப்பிடவில்லை என்றும்,இதனால் வீரைய்யன் அழுது கொண்டு இருந்ததாகவும், காய்ந்த நெல்லை மாடுகளாவது உண்ணட்டும் என மாடுகளை வயலில்திறந்துவிட்டதாகவும் அவரது மனைவியான சின்னப் பொன்னு தெரிவித்துள்ளார்.

மேலும் நெல் விளைச்சல் இல்லாவிட்டால் தன்னால் வாஙகிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்பதால் தான் அவர்தற்கொலை செய்து கொண்டதாகவும் வீரைய்யனின் மனைவி கூறினார்.

பூச்சி மருந்தை குடித்த அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அந்த கிராம மக்கள் எடுத்துக் கொண்டு ஓடினர். ஆனால்.சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இந்தத் தற்கொலை குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவிரி விவகாரத்தால் மீண்டும் பஞ்சம், பட்டினி உருவாகியுள்ள நிலையில் விவசாயி வீரைய்யனின் தற்கொலை அப் பகுதிமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சாவுகள் தொடராமல் தடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும், கர்நாடக, தமிழக அரசுகளுக்கு உண்டு.

இந் நிலையில் இனிமேல் இந்த மாவட்டங்களில் நெல் பயிரிட்டு பிழைப்பு நடத்த முடியாது என்பதால் குறைந்த அளவே நீர்த்தேவைப்படும் எள் பயிரை பயிரிடும் முயற்சிகளில் சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நீரைத் திறந்துவிட ஜெ. உத்தரவு:

இதற்கிடையே விவசாயியின் தற்கொலையையடுத்து காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீரைத்திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை உத்தரவிட்டார். வரும் 9ம் தேதி வரை இந்த நீரைத் திறந்துவிடுமாறு அவர்உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மேட்டூரில் குடிநீர்த் தேவைகளுக்காக வைக்கப்பட்டுள்ள சொற்ப நீர் பாசனத்துக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையில் 12.8 டி.எம்.சி. நீர் தான் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,234 கன அடி நீர் தான் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வினாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர் விடாவிட்டால் வரும் 9ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில் பந்த் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் மிரட்டல்விடுத்திருந்து நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+