கேட்டார் ஜெயலலிதா... கொடுப்பாரா நாயுடு??
சென்னை:
சென்னையின் குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக வற்றி வருவதால் உரிய நேரத்தில் கிருஷ்ணா நீரைவிடுவிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்புபோதிய அளவு இல்லை. மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மார்ச் மாதத்திற்கு மேல் நகரில் கடும்குடிநீர்த் தட்டுப்பாடு வரலாம்.
எனவே ஏப்ரல் மாதத்திலிருந்து கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு நாயுடுவிடம் கோரியுள்ளேன் என்றார்.
10ம் தேதி ஹைதராபாத்தில் கூட்டம்:
இதற்கிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு-கங்கை திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 10ம் தேதிஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
அப்போது சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவது தொடர்பாக தமிழக மற்றும் ஆந்திர மாநிலத் தலைமைச்செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர்.
இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு மாநில அரசுகளின் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்து பேச்சு நடந்துவருகிறது. மார்ச் மாதத்திற்கு மேல் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இப்போதேதண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டோம் என்றார் அமைச்சர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகளில் தற்போது மொத்தம் 2,868மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 3,391 மில்லியன் கன அடி நீர் இருதது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications