தமிழகத்தில் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து
சென்னை:
தமிழகத்தில் 40,000 மையங்கள் மூலம் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்றுவழங்கப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் தடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் 5 வயதுக்குக் கீழே உள்ளகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இன்றும் அடுத்த மாதம் 9ம் தேதியும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்துஅளிக்கப்படும்.
அதன்படி முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் சுமார் 40,000 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், கம்பவுண்டர்கள் உள்ளிட்ட இரண்டு லட்சம்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை, அம்மாநகராட்சியின் மேயர் கராத்தே தியாகராஜன்ஆகியோர் வெவ்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் ஒரு குழந்தையைக் கூட விட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள்குறிக்கோள் என்று நிருபர்களிடம் செம்மலை கூறினார்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications