குளோனிங் குழந்தைகளை உருவாக்குவதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குளோனிங் மூலம் முதல் குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது கலக்கத்தை தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆண்- பெண் செக்ஸ் செல்களுக்குப் பதிலாக உடல் செல்லை (stem cell) வைத்தே உயிர்களை உருவாக்குவது தான் குளோனிங்முறையாகும். அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள குளோன்எய்ட் ஆராய்ச்சி மையத்தில் இந்த குளோனிங் குழந்தைகடந்த டிசம்பர் 26ம் தேதியன்று பிறந்தது.

இப்போது ஒரு லெஸ்பியன் தம்பதிக்கும் இதே போன்ற குளோனிங் குழந்தை பிறக்க உள்ளதாகவும் இந்த மையம்தெரிவித்துள்ளது.

இந்த முறையில் குழந்தை பிறப்புக்கு ஒரு பெண்ணே போதும். ஆணின் உதவி தேவையில்லை.

ஒரு உயிரிடம் இருந்தே இன்னொரு உயிரை நேரடியாக உருவாக்குவது மருத்துவ மற்றும் உலகியல் நியதிகளுக்கு எதிரானதுஎன்று இதற்கு உலகம் முழுவதுமே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவும் இதனை எதிர்த்துள்ளார்.

பெண் விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் குறித்த தேசிய மாநாட்டை இன்று சென்னையில் துவக்கி வைத்த ஜெயலலிதாபேசுகையில்,

31 வயதான பெண்ணிடம் இருந்து ஈவ் என்ற குளோனிங் குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது.கலக்கம் தருவது. ஆராயாச்சியாளர்கள் மருத்துவ நியதிகளை மீறுவதை ஏற்கவே முடியாது.

உயிரித் தொழில்நுட்பம் (ஜெனிட்டிக் இன்ஜினியரிங்) மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்றஆராய்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

தொழில்நுட்பம் என்பது இரு முனைக் கத்தி மாதிரி. ஒரு பக்கம் உயிரித் தொழில்நுட்பத்தை வைத்து வாக்சீன் தயாரித்துஉயிர்களைக் காக்க முடிகிறது. இன்னொரு பக்கம் அதே தொழில்நுட்பத்தை வைத்து புதிய வகை நோய் பரப்பும்வைரஸ்களையும், உயிரியல் ஆயுதங்களையும் தயாரிக்க முடிகிறது.

மனிதனுக்கும் உலகுக்கும் பயன்படுகிற நல்ல தொழில்நுட்பம் தான் தேவையே தவிர, அறிவியலை தவறாகப் பயன்படுத்தும்எந்தத் தொழில்நுட்பமும் நமக்குத் தேவையில்லை என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+