அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை: காவிரி தொடர்பாக முக்கிய முடிவு
சென்னை:
தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. காவிரிஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாத இறுதியில் தொடங்கும் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ராமமோகன் ராவ் ஆற்றவுள்ளஉரைகள் குறித்தும், சட்டசபையில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
மேலும் வரும் 13ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெறவுள்ள காவிரி ஆணையக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஜெயலலிதாஆலோசனை நடத்தினார். இது தொடர்பான முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
கல்வி துறையில் மாறுதல்கள்:
இதற்கிடையே கல்வித் துறையில் பல மாறுதல்களைச் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளது போன்ற கல்வித் துறைக்கான விதிமுறைகளை மூட்டைகட்டி விட்டு புதிய விதிமுறைகளைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரான ஏ. முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான ஒரு உயர் நிலைக் குழுஅமைக்கப்படவுள்ளதாக தமிழகக் கல்வி அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
இந்தக் குழு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தன்னுடைய பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்றும் அதற்குத்தகுந்தவாறு அடுத்த சந்ததியினருக்கும் பயன் தரும் வகையில் கல்வித் திட்டங்களில் பல முக்கியமான மாறுதல்கள்செய்யப்படும் என்றும் செம்மலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கல்வித் துறை விதிமுறைகள் 1889ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications