பட்டினிச் சாவை தடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சாட்டையடி
சென்னை:
உண்மையான மக்கள் நல அரசாக இருந்திருந்தால் பட்டினிச் சாவுகளைத் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்ய தமிழக அரசுதவறியது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் தஞ்சையிலும் திருவாரூரிலும் இரு விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.காவிரியில் நீர் வராத பட்சத்தில் இந்தத் தற்கொலைகள் தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சாவுகளை சாராயச் சாவு என்றும் குடும்பப் பிரச்சனையால் ஏற்பட்ட தற்கொலை எனவும் அரசு உண்மையைதிரித்து வருகிறது.
இந் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு உடனே உதவ வேண்டும் என்று கோரி ராஜேந்திரன் என்றவழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், காவிரி டெல்டா பகுதியில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் கடன் வாங்கி அதனைப் பயிரிட்ட விவசாயிகள் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் உண்ண ஏதுமின்றி பட்டினி கிடந்து வருகின்றன.
இவர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை உடனேஅடையாளம் கண்டு அவர்களுக்கு இலசவ அரிசியை உடனே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரணைக்குஎடுத்துக் கொண்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மாநில அரசு மக்கள் நல அரசாக இருந்திருந்தால் பட்டினிச்சாவை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். பட்டினியால் ஏற்படும் சாவது குறித்து மாநில அரசை கேள்வி கேட்கநீதிமன்றத்துக்கு முழு உரிமை உண்டு.
இந்த விவகாரம் குறித்தும் வரும் 20ம் தேதிக்குள் மாநில அரசு விவர அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்என்று கடும் உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவது குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருந்து வரும் மாநில அரசுக்குசாட்டை அடி தந்துள்ளது உயர் நீதிமன்றம்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications