சம்பா கருகியதால் சோகம்: மற்றொரு விவசாயி தற்கொலை
திருவாரூர்:
நீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியதையடுத்து தமிழக காவிரி டெல்டா பகுதியில் மற்றொருவிவசாயி தற்கொலை செய்து கொண்டார். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அவர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளசம்பா பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தஞ்சாவூர் அருகே வீரையன் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் சாராயம் குடித்துதான் உயிரிழந்ததாக தமிழக அரசு கூறியது. இதை வீரையனின்குடும்பம் கடுமையாக மறுத்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பாளையக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம்(52) என்ற விவசாயி நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
தான் சாவதற்கு முன் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார் சண்முகம். அந்தக் கடிதத்தில்,
கடந்த ஆண்டு கடன் வாங்கித்தான் நான் சம்பா பயிரிட்டேன். ஆனால் பலத்த மழை பெய்ததால் பயிர்கள்அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
இதனால் எனக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது. குறுவை பயிரைச் சாகுபடி செய்தாவது கடனை அடைத்து விடலாம்என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காவிரியிலிருந்து நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடியும் செய்யமுடியவில்லை.
பின்னர் மீண்டும் நம்பிக்கையுடன் சம்பா பயிரை நடவு செய்தேன். காவிரியில் நீர் திறக்கப்பட்டது மற்றும்சமீபத்தில் பெய்த மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே சம்பா பயிரிட்டேன்.
ஆனால் மீண்டும் தற்போது சம்பா சாகுபடிக்குத் தேவையான நீர் கிடைக்கவில்லை. இதனால் சம்பா பயிர்கள்அனைத்தும் கருகத் தொடங்கி விட்டன.
நடப்பு பருவத்தில் சம்பா பயிரிட்டதன் மூலம் எனக்கு ரூ.7,000 வரை கடன் ஏற்பட்டுள்ளது. அதைக் கட்ட முடியும்என்ற நம்பிக்கை போய்விட்டது.
அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனாலும் என் குடும்பத்தையாவது அரசுகாப்பாற்றும் என்ற நம்பிக்கையில் நான் மட்டும் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில்சண்முகம் எழுதியுள்ளார்.
இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
சண்முகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரானநல்லக்கண்ணுதான் இந்தக் கடிதத்தை நேற்று வெளியிட்டார். திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கும் இதன் நகல்அனுப்பப்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications