5 பேரை வெட்டிக் கொன்ற 3 சகோதரர்களுக்கு தூக்குத் தண்டனை
தூத்துக்குடி:
எட்டயபுரம் அருகே 5 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்ற 3 சகோதரர்களுக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது தலைக்காட்டூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன்என்பவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் கடந்த 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின் சில நாட்களிலேயே கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துமகேஸ்வரி தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சரவணன் வீட்டாருடன் சமரசம் பேசுவதற்காக கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம்தேதி மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு அவரது தந்தை முத்துச்சாமி, தாயார் குருவத்தம்மாள், சகோதரர்சுந்தரமூர்த்தி, சித்தப்பா குருசாமி ஆகியோர் வேனில் தலைக்காட்டூர் சென்றனர்.
சரவணன் வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தகராறு வெடித்ததைத்தொடர்ந்து, ஐந்து பேரும் மீண்டும் விருதுநகருக்கே கிளம்பினர்.
அப்போது அவர்களது வேனை வழிமறித்த சரவணன், அவரது அண்ணன் சங்கரநாராயன்,தம்பி சந்தனப்பாண்டியன் ஆகியோர் வேனில் இருந்த ஐந்து பேரையும் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் 5 பேரும் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
கொலையாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரத்தினராஜ்தீர்ப்பு அளித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications