மாஜி திமுக அமைச்சருக்கு ரூ. 1 கோடி சொத்து
திருச்சி:
முன்னாள் திமுக அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புபோலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். திருச்சியிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள அவரது வீடுகளில்நடந்த சோதனைகளில் அவருக்கு வருமானத்தையும் மீறி சுமார் ரூ. 1 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்தது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கால்நடைத் துறை அமைச்சராக இருந்தவர் செங்குட்டுவன். திருச்சி மாவட்டம்துவரங்குறிச்சியை அடுத்த வேலங்குறிச்சியில் இவருடைய வீடு உள்ளது.
இந்த வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத் துறைடி.எஸ்.பி. போஸ் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
திருச்சி கல் மண்டபம் வீட்டிலும் அதே நேரத்திலேயே லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டனர்.
செங்குட்டுவன் வீடு தவிர அவருடைய மகள், தம்பி மற்றும் உறவினர் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புபோலீசார் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை வரை தொடர்ந்தன. சுமார் 20 போலீசார் இந்தச்சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதில் மாஜி அமைச்சருக்குச் சொந்தமான சொத்துக்கள் பலவற்றின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அமைச்சராவதற்கு முன் அவருக்கு துவரங்குறிச்சி அருகே வெளக்குறிச்சியில் வெறும் 4.9 ஏக்கர் நிலம் தான்இருந்தது.
ஆனால், இப்போது இவரிடம் இருப்பது கோடிக்கணக்கான சொத்துக்கள். இதில் இன்று சோதனையில் சிக்கியவைரூ. 1 கோடிக்கான ஆவணங்கள்.
இதையடுத்து இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 109வது பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டம் 13வதுபிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கூட்டுவன் தவிர அவரது இரு மகன்கள், மகள், மருமகன்,தம்பி மகன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
30 ஏக்கர் நிலம், கார்கள், ரூ. 52 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தியது, மோட்டார் சைக்கிள்கள், ஏர் கண்டிசனர்கள்,புல்டோசர்கள் வாங்கியது என சுமார் ரூ. 1 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளார் செங்கூட்டுவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications