தாமரைக்கனி தாக்கப்படட வழக்கு: வைகோவை விசாரிக்க இடைக்காலத் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவான தாமரைக்கனி தாக்கப்பட்டது தொடர்பாக நாகப்பட்டினம்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 வாரம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு மயிலாடுதுறையில் தாமரைக்கனி உள்ளிட்ட சில அதிமுகவினரை வைகோ, முன்னாள் திமுகஅமைச்சர் கோ.சி. மணி உள்ளிட்ட திமுகவினர் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ, கோ.சி. மணி மற்றும் இடும்பன் ஆகியோர் தவிர அனைவரும்ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கின் விசாரணை நாகப்பட்டினம் செசன்ஸ் நீதிமன்றத்தில்நடந்து வருகிறது. இதற்காக வேலூர் சிறையில் இருந்து வைகோ அடிக்கடி நாகப்பட்டிணம் கொண்டு வரப்பட்டுவிசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஆனால், இவ்வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் எனவே இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி வைகோ நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார்.

ஆனால், வைகோவின் மனுவை நாகப்பட்டினம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அதேகோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் வைத்தார் வைகோ.

அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தங்கவேல், தாமரைக்கனி தாக்கப்பட்டது தொடர்பானவழக்கின் விசாரணைக்கு ஆறு வார கால இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்ட நீதிபதி அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+