For Daily Alerts
Just In
ஜெயம்கொண்டத்தில் பள்ளி மாணவி கடத்தல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், பள்ளி மாணவி கடத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவரது மகள் நஸ்ரீன் பானு, ஜெயம்கொண்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி4-வது வகுப்பு படித்து வருகிறார்.
வியாழக்கிழமை வழக்கம்போல நஸ்ரீன் மற்றும் உடன் படிக்கும் மற்ற சிறுமிகள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர்வந்து நஸ்ரீன் பானுவை மட்டும் மிரட்டி அவளைக் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்துமற்ற சிறுமிகள் பள்ளிக்கு ஓடிச் சென்று தகவல்தந்தனர்.
தகவல் கிடைத்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் கூடினர். இதுதொடர்பாக ஜெயம்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்த நஸ்ரீனைத் தேடி வருகின்றனர்.
-->


