பெரம்பலூர் அதிமுக பேரூராட்சி தலைவர் வெட்டிக் கொலை: மக்கள் தாக்கியதில் கொலையாளி பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர் பேரூராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் இன்று அடையாளம் தெரியாத ஒருகும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒரு கொலையாளியை மரக்கட்டையால்அடித்துக் கொன்றனர். மற்ற கொலையாளிகள் தப்பித்து விட்டனர்.
பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி பகுதியில் இன்று காலை செல்வராஜ் தன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் திடீரென்று செல்வராஜின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய அந்தக் கும்பல், சிறிது கூடத்தாமதிக்காமல் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் அவரைத்தாக்கியது.
இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே செல்வராஜ் பிணமாகச் சரிந்தார். அவர் போட்ட அலறலைக்கேட்ட அக்கம் பக்கத்து மக்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு கொலையாளிகளைத் துரத்த ஆரம்பித்தனர்.
கொலையாளிகளில் சக்திவேல் என்பவன் மட்டும் மக்களிடம் வகையாகச் சிக்கிக் கொண்டான். அவனைத் தாங்கள்வைத்திருந்த மரக்கட்டைகளாலேயே மக்கள் சராமாரியாகத் தாக்கினர். இதில் சக்திவேலும் ரத்த வெள்ளத்தில் அந்தஇடத்திலேயே உயிரிழந்தான்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக்குவிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாகவே செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த சிலஆண்டுகளுக்கு முன் "நக்கீரன்" பத்திரிக்கை நிருபர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்குப்பழிவாங்கும் விதமாகவே இன்று கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications