சாத்தான்குளத்தில் அரசு நலத் திட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் முடிவடையும் வரை அங்கு அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படக் கூடாதுஎன்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுங்சய் சாரங்கி கூறினார்.
சென்னையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் பிப்ரவரி 26ம் தேதி சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்தத் தொகுதியில் நலத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ அரசுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.
எனவே அந்தத் தொகுதியில் நலத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ அரசுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
மேலும் வாக்காளர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளையோ அல்லது தங்களை அடையாளம் காட்டும்ஆவணங்களையோ கொண்டுவந்தால் மட்டுமே அவர்களால் ஓட்டுப் போட முடியும் என்று அவ்வறிக்கையில்சாரங்கி கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் சாலை பணியாளர் போராட்டம்:
இதற்கிடையே, வேலையிலிருந்து நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை மீண்டும் சேர்க்கக் கோரி வரும் பிப்ரவரி22ம் தேதி சாத்தான்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சாலைப் பணியாளர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டு சுமார் 10,000 சாலைப் பணியாளர்களை வேலையிலிருந்து விலக்கி வீட்டுக்குஅனுப்பியது.
இதை எதிர்த்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை தங்கள் குடும்பத்தினருடன் போராட்டம்நடத்தியும் கூட அவர்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை சாத்தான்குளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் பிப்ரவரி 26ம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அப்போதாவது எங்கள் மீது தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் பார்வை படும் என்று நம்புகிறோம் என்று சாலைப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர்கூறினார்.
சாத்தான்குளத்தைத் தொடர்ந்து வேறு பல ஊர்களிலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவும் சாலைப்பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications